Categories
அரசியல்

தீபாவளி பண்டிகை…. எதையெல்லாம் செய்யக்கூடாது…. பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது சாலை விபத்துகளும், பட்டாசுகள் வெடிக்கும் போது தீ காயங்களும் ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • பட்டாசுகளை வாகனங்கள் இல்லாத திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.
    உரிமம் பெற்ற கடைகளில் இருந்து தரமான பட்டாசு வாங்குவது மிகவும் நல்லது.
  • வாங்கி வந்த பட்டாசுகளை மரப்பெட்டியில் வைத்து தனி அறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணிய கூடாது.
  • குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் உடன் இருப்பது மிகவும் அவசியம். நீளமான கம்பி மத்தாப்பு அல்லது ஊதுவத்தி பயன்படுத்தி பட்டாசுகளை கொடுத்த வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் ஒரு வாளி நிறைய தண்ணீரையும், முதலுதவி பெட்டியையும் வைத்திருக்க வேண்டும்.
  • பட்டாசு வெடித்த பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.
  • வீட்டில் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், வளர்ப்பு பிராணிகள், வயதானவர்கள் இருந்தால் அதிகம் சத்தம் உள்ள வெடிகளை வெடிக்க கூடாது. மேலும் அதிக புகை உண்டாக்கும் பட்டாசுகளை வெடிப்பதால் சில நேரம் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
  • கைகளில் பிடித்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. மது அருந்திவிட்டு பட்டாசு வெடிப்பதையும், வாகனம் ஓட்டுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
  • பட்டாசு வெடித்த காயத்தின் மீது காபித்தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை வைக்கக் கூடாது.

Categories

Tech |