தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வரும் 27ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 80% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் காலத்தில் 100% ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Categories