இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பூசி, சுடு தண்ணீரில் குளிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருவிழாவானது கொண்டாடப்படும். இந்த திருநாளில் லட்சுமிதேவி கடலில் இருந்து வெளிவந்து காட்சி புரிந்ததாக ஒரு புராண வரலாறு இருக்கிறது.
இந்த திருவிழா நடப்பாண்டில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் கொண்டாடப்படும். இந்த திருநாளில் ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரி பூஜை மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பு. நாம் லட்சுமி தேவி மற்றும் விநாயகர் பெருமானை வணங்குவதன் மூலம் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதோடு அந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் வீட்டில் என்றென்றைக்கும் செல்வம் வளம் நினைத்து இருக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.
மேலும் தற்போது பூஜை செய்வதற்கான சிறப்பு நேரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி அக்டோபர் 22 சனிக்கிழமை அன்று தந்தேரஸ் பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை சுபமுகூர்த்த தினத்தில் மாலை 7:31 மணி முதல் 8.36 மணி வரை செய்யலாம். இதனையடுத்து பிரதோஷ காலம் மாலை 6.07 மணி முதல் 8.36 வரையும், விருஷப காலம் இரவு 7:31 மணி முதல் 9:31 வரையும், திரயோதசி திதி அக்டோபர் 23-ம் தேதி மாலை 06:03 மணி அளவில் முடிகிறது.