Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சிறப்பு பேருந்துகளில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டபிள்யூ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 7,000 பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளார்.

அரசின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50% இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2 ஆம் தேதி 4,000 பேரும் மூன்றாம் தேதி 3,000 பேரும் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு 1 வாரத்திற்கு முன்னர் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |