Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு… “அரசு பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு”…!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் சொந்த ஊருக்கு 21 ஆம் தேதியும் பயணத்தை மேற்கொள்வதற்காக பயணிகள் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

மேலும் அரசு விரைவு பேருந்துகளில் 21, 22, 23 ஆகிய மூன்று தினங்களும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சிலர் ஆம்னி பேருந்துகளிலும் புக்கிங் செய்து வருகின்றார்கள் ரயிலில் இடம் கிடைக்காத சாமானிய மக்கள் அரசு சிறப்பு பேருந்துகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு பேருந்துகளில் 50,000 எட்டி இருக்கின்றது. மேலும் சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து 21ம் தேதியை பயணம் செய்ய 23 ஆயிரம் பேரும் 22 ஆம் தேதிக்கு 21,000 பேரும், 23ஆம் தேதிக்கு நான்காயிரம் பேரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இன்று இந்த எண்ணிக்கையானது 50,000 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இது பற்றி போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசியபோது, தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த இரண்டு வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பேருந்து பயணம் அதிகரித்து இருக்கிறது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயங்குவது பற்றி அதிகாரிகளுடன் அமைச்சர் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்கின்றார். இந்த நிலையில் வழக்கம்போல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இந்த வருடம் கூடுதலாக இயக்க திட்டமிட்டு இருக்கப்படுகிறது. மேலும் இது பற்றி அறிவிப்பு பத்தாம் தேதி வெளியாகும் முதற்கட்டமாக 450 அரசு விரைவு பேருந்துகளும் முன்பதிவு செய்து வருகின்றது. இதில் சென்னையிலிருந்து வெளியூர் செல்வதற்கு மட்டும் 40 ஆயிரம் பேருந்துகள் முன்பதிவு செய்து இருக்கின்றனர். மேலும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ம் தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |