Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….. அரசு அதிரடி….!!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் சீருடை மற்றும் மாற்று உடையில் போல சார் ரோந்து பணியில் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண் காவலர் மற்றும் பிங்க் போலீசார் குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிசிடிவி கேமராக்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெல்லியில் துணை ஆணையர் சஞ்சய் அரோரா அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அந்தந்த மாவட்டங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை வலுப்படுத்த உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாந்தினி சௌத் ஆசாத்பூர் மற்றும் காஜிபூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளுகு டெல்லிக்கு வெளியிலிருந்து பலர் அடிக்கடி வந்து செல்வதால் காவல்துறையினர் கண்காணிப்பில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதிலும் சந்தைகள், வணிக வளாகங்கள் முக்கிய இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் செய்யும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பதற்காக பார்வையாளர்களிடையே விழிப்புணர் பரப்புவதற்கு சரோஜினி நகர் சந்தையின் வழித்தடங்களில் கொடி அணிவகுப்பு மற்றும் தீவிர ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து அசாத்பூர் மண்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு வரும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் குழுக்கள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக வடமேற்கு மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்துக்குரிய நபர் அல்லது செயலை செயலை கண்டால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கிடையில் எல்லையோர பகுதிகளில் நடமாட்டம் குறித்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |