தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சில அசம்பாவிதங்கள் ஏற்படுவது வழக்கம். அதனால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு தற்போதிலிருந்தே செய்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காய பிரிவு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 10 படுக்கைகள், தீக்காய பிரிவுக்கென அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Categories