தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம்.
அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், படப்பை கண்டிகை, மாம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் கோயம்பேடு சென்று பேருந்தில் ஏற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாறாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவர்கள் முன்பதிவு செய்து இருக்கின்ற பேருந்துகளில் ஏற வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது தினமும் சராசரியாக 250 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. பயணிகளுக்கு தேவையான சுகாதார மற்றும் கழிப்பிட வசதிகள் இங்கு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கூறியுள்ளார்.