தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்ற வாலிபர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் இருக்கும் பனைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பூமிநாதன் அவரது நண்பர் பபின்ராஜ். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக நகரை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது.
இதனால் தூக்கி வீசப்பட்ட பூமிநாதன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பபின்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.