Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை”… வீடுகளை சுத்தம் செய்யும் போது….. இதை கவனிப்பது அவசியம்….!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமின்றி சமணர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் தீபாவளியை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம்.

தீபாவளிக்கு வீடு சுத்தம் செய்யும்போது இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

  • பொதுவாகவே வீட்டில் உடைந்த பொருட்களை வைத்திருக்கக் கூடாது. அசுபமாக கருதப்படும் உடைந்த கண்ணாடி வாழ்க்கையில் முன்னேற விடாமல் ஏழையாக்குகிறது. எனவே வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் மின்சாதன பொருட்களில் தட்டுப்பாடு அல்லது சேதமடைந்து காணப்பட்டால் அதனை உடனே சரி செய்ய வேண்டும்.
  • உடைந்த அல்லது ஓடாத கடிகாரங்கள் வீட்டில் இருப்பது துரதிஷ்டமாக கருதப்படுகிறது. மேலும் முன்னேற்றத்தை தடுப்பதாக உடைந்த கடிகாரங்கள் கருதப்படுகிறது. எனவே கடிகாரங்களை சரி செய்ய இயலாத பட்சத்தில் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.
  • வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் உடைந்த சிலை இருந்தால் அதனை அப்புறப்படுத்தி புதிய சிலைகளை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
  • வீட்டின் மேற்கூரை அழுக்காக இருந்தால் அதனை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி வைக்க வேண்டும்.

Categories

Tech |