தீபாவளி நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது.
அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு இடங்களில் பணி புரியக்கூடியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களுக்கான மதுரை, கோவை, திருச்சி, சேலம் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்த நிலையில், வரக்கூடிய தீபாவளிக்கு கட்டணங்களை உயர்த்தி பகிரங்கமாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூபாய் 850 ரூபாய் – 1400 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.. ஆனால் தீபாவளி நாட்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ 2,000 – ரூ 2950 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ 700 – ரூ 1300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தீபாவளி நாட்களில் ரூ 1500 – ரூ 2,950 வரை வசூலிக்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து கோவைக்கு ரூபாய் 800 – ரூ 1300 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தீபாவளி நாட்களில் ரூ 1700 – ரூ 2490 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வை அரசு குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.