Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பரிசு பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம்” போலீசாரின் அறிவுரை…..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, தீபாவளி நேரத்தில் பரிசு பொருட்கள் குறித்த விளம்பரங்களை பார்த்தால் பொதுமக்கள் நன்றாக ஆராய்ந்து விசாரிக்க வேண்டும்.

இதனை அடுத்து குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட கூடாது. மேலும் கடன் செயலியில் கடன் பெறக்கூடாது எனவும், ஆன்லைனில் பணத்தை இழந்தால் 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |