தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புது படங்களை திரையிட அனுமதி இல்லாத சூழ்நிலையினால் தீபாவளி அன்று ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. படக்குழுவினர் வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்துள்ளது.