Categories
பல்சுவை

தீபாவளி – புராணக் கதைகளும், வரலாற்று உண்மைகளும்……!!

உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது தான் தீபாவளி. தீபாவளி பற்றி நிறைய பேர் நமக்கு நிறைய கதைகளை சொல்லி இருப்பாங்க. தீபாவளி என்று சொன்னதும் பட்டாசு , வானவேடிக்கை என மனசுல வண்ணமயமாக கொண்டாட்டம் நினைவுக்கு வரும். இது சின்ன பசங்களுக்கு மட்டுமல்ல , பெரியவர்களுக்கும் தான். சுற்றுச்சூழல் பாதிப்பு , காற்று மாசுபாடு அது இதுன்னு எதிர்மறை விஷயங்கள் சொன்னாலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது என்றுமே மாறாது.

தீபாவளி பண்டிகை இந்தியா , அமெரிக்கா , இங்கிலாந்து மாதிரியான மேற்கத்திய நாடுகளிலும் , நேபாளம் , இலங்கை , மியான்மர் , மொரீசியஸ் , மலேசியா , சிங்கப்பூர் மாதிரியான இந்தியர்கள் அதிகம் இருக்கக்கூடிய பல நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். தீபாவளி கொண்டாட்டம் மட்டுமின்றி அதை நம்பி ஏராளமான தொழிற்சாலைகளும் ,  லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இருக்காங்க , அப்படிங்கிற உண்மையை மறுத்துவிட முடியாது. ஷாப்பிங் சென்று டிரஸ் எடுத்து சந்தோசமாய் இருந்தாலும் , செலவுகளை நினைத்து குடும்ப தலைவர்களும் குடும்ப தலைவர்களும் அச்சப்படுவது அதனுடைய இன்னொரு விஷயம் .

பலகாலமாக கொண்டாடம் தீபாவளி என்ற பாரம்பரிய விழா_வுக்கு பின்னாடி அறிவியல் ரீதியில் ஏதாவது காரணம் இருக்கின்றதா ? என்று தேடி பார்த்தால் அப்படி ஏதும் இருக்கிற மாதிரி தெரியல. ஆனா இதுக்கு பின்னாடி ஏராளமான புராணக் கதைகளும் சில வரலாற்று உண்மைகளும் இருக்கு அதை தெரிஞ்சுகிறது தான் இந்த செய்தி தொகுப்பு.

தீபாவளி கொண்டாடுவதற்கு காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை ஏராளமாக இருந்தாலும் ஒரு சில புராணக்கதைகள் இதற்க்கு ரொம்பவும் புகழ்பெற்று இருக்கு. அதில் முக்கியமானது நரகாசுரன். முன்னாடி ஒரு காலத்தில் நரகாசுரன் அப்படின்னு ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் , மக்களுக்கும் நிறைய துன்பங்களைக் கொடுத்து இருந்தார். அதனால் மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான விஷ்ணு நரகாசுரனைக் கொல்ல நினைத்தார். ஆனால் தன்னுடைய தாயார் பூமா தேவியால் மட்டுமே தன்னை கொல்ல முடியும் அப்படின்னு ஒரு வரம் நரகாசுரன் வாங்கி இருந்தார்.

இதனால் விஷ்ணு ஒரு தந்திரம் செய்து கிருஷ்ணர் வடிவத்தில் பூமிக்கு போயி நரகாசுரனை எதிர்த்து போர் புரிந்தார். நரகாசுரன் அம்பு பட்டு கிருஷ்ணர் இறந்தது மாதிரி நடிச்சதை பார்த்த பூமாதேவி அவதாரமான சத்தியபாமாவுக்கும் கோபம் வரவே பூமாதேவி நரகாசுரனை கொன்னுட்டாங்க. நரகாசுரன் தான் இறக்கும் போது தன்னுடைய தாய் தான் சத்தியபாமா அவதாரம் என்று தெரியவந்தது. அப்போ தான் இந்த நாளை எல்லோரும் மகிழ்ச்சியாகக் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டுமென்று நரகாசுரன் கேட்டுக் கொண்டாராம். அதனாலதான் தீபாவளி கொண்டாடப்படுவதாக பேமஸான புராண கதை சொல்லுது.அதே போல இன்னொரு புராண கதை என்ன சொல்லுதுன்னா ? ராமனும் சீதையும் 14 ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் ரொம்ப சந்தோசமா பண்டிகையா கொண்டாடுங்க. அந்த நாளை தான் தீபாவளி என்று வால்மீகி ராமாயணம் சொல்லுது.

இந்த கதைகள் நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா சிவன் தன்னுடைய ஒரு பாதியாக பார்வதியை ஏற்றுக் கொண்டு அர்த்தநாதீஸ்வரராக மாறி நாள் தான் தீபாவளி என்று இன்னொரு கத்தியும் இருக்கு. பார்வதியோட 21 நாள் கேதா கெளரி விரதம் முடிந்து சிவன் அர்த்தநாதீஸ்வரர் அவதாரம் எடுத்த நாள் தான் தீபாவளி என்று கந்த புராணத்துல சொல்லப்பட்டு இருக்கு. தென்னிந்தியாவை ஆட்சிபுரிந்த மகாபலி அப்படிங்குற மன்னரோடா செருக்கை அடக்குவதற்காக விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து தன்னுடைய ஒற்றை காலால் நசுக்கு அவனை பாதாளத்துக்கு அனுப்புனா தினம் தான் தீபாவளி அப்படினு ஒரு சில வைணவர்களால சொல்லப்படுகின்றது.

இப்படி ஒவ்வொரு காலத்துக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு புராணத்துல ஒவ்வொரு மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிங்க.

இப்படி காலத்துக்கு தகுந்த மாதிரி புராணங்கள் பல கதைகள் சொல்லி இருந்தாலும் வரலாற்று அறிஞ்சர்கள் பலரும் தீபாவளி ஹிந்துக்களுக்கான  பண்டிகையை கிடையாது  அப்படின்னு சில கதைகள் இருப்பதாக  சொல்றாங்க. சமணர்களுடைய 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் பாவாபுரி மன்னர் ஓட அரண்மனையிலே தங்கியிருந்து அங்கிருந்து மக்களுக்கு சொற்பொழிவு கொடுத்துட்டு இருந்தப்போ அதிகாலையில் அமர்ந்தபடியே மகாவீரர் நிர்வாண நிலையை அடைந்து இருக்காரு. உலகத்துக்கே ஞான ஒளியாக இருந்த மகாவீரர் மறைந்ததை நினைவுபடுத்த விதமா இந்த நாள்ல வீடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று  என்று பாவாபுரி மன்னர் ஏற்பாடு செய்தார் அதுதான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்றாங்க.

தீப + ஆவளி = தீபாவளி பொருள்: தீபங்களின் வரிசை அப்படி என்று பொருள். அந்த நாளை தன்யா தேராஸ் அப்படினு சைன மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மகாவீரர் உயிர்நீத்த நாளை தான் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து அப்புறமாக திருவிளக்கை ஏற்றி தீபாவளி பண்டிகையை அனுசரிச்சு இருக்காங்க அப்படின்னு சொல்றாரு தமிழறிஞரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் மயிலை சீனி வெங்கடசாமி கூறுகின்றார்.

இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் பழக்கம் இல்லை என்கிறது சுட்டிக்காட்டுற மயிலை சீனி வெங்கடசாமி மகா வீரர் விடியற் காலையில் இயற்கை எழுதியதால் தீபாவளியும்  விடியற்காலையில் கொண்டாடப்பட்டு இருக்கு என்று விளக்கி கூறுகிறார். மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடி வந்ததை தான் அப்படியே நாங்களும் ஏற்றுக் கொண்டோம் அப்படிங்கறத ஏத்துக்கிற மனசு இல்லாம புதுசா நமக்கு நாமே கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை அப்படிங்கறது என்று சீனிவேங்கடசாமி சொல்கிறார்.

மகாவீரரின் உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருந்தாத நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்து சமயம் சார்ந்தவர்களால் சொல்லப்பட்டிருக்கிறதா சொல்ற தமிழறிஞர் ராசமாணிக்கனார் சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவ சமயங்களை தழுவியதாகவும் அப்பவும் அவங்க தீபாவளியை கொண்டதாகவும் அந்த பழக்கமே மற்ற சமூக சமயத்தை சேர்ந்தவர்கள் கிட்ட நாளடைவில் புகுந்து இருப்பதாகும் தன்னுடைய தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.

தீபாவளி நாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக இருக்கிறது. தமிழன் மரபில் நீத்தார் வழிபாடு செய்யும் போது தான் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்போம். அதே மாதிரி தீபாவளி நாள் அமாவாசைக்கு தான் வரும். இந்த விஷயங்களை வைத்து பார்த்தால் மகாவீரர் உடைய நினைவு நாள் தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறார்களோ அப்படின்னு தெரியுது. இப்படி சொல்றாரு தமிழறிஞரும் பண்பாட்டு வியல் ஆய்வாளருமான தோ பரமசிவம் தீபாவளி அப்படிங்கிற வடமொழி சொல்லுக்கு இணையான தமிழ் சொல் இல்லை என்பதை எடுத்துக்காட்டுற பரமசிவம் பதினைந்தாவது நூற்றாண்டில் தமிழ் நாட்டை பிடித்த விஜயநகர பேரராசலதான் தீபாவளி தமிழ்நாட்டில் நுழைந்ததாகவும் சொல்கிறார்.

சமணர்கள் மட்டுமில்லாமல் சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள் உலகளவில் இருக்கக்கூடிய தமிழர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து தீபாவளி ரொம்ப உற்சாகமாக கொண்டாடி கொண்டு இருக்கிறது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்னதான் தீபாவளி பற்றி புராண கதைகள் வரலாற்று உண்மைகள் இருந்தாலும் பல வருஷங்களாக தீபாவளியை எல்லாருமே அதே உற்சாகத்துடன் கொண்டாடி விட்டு தான் இருக்காங்க.

Categories

Tech |