Categories
பல்சுவை

தீபாவளி முடிஞ்சதும் ஹேப்பி தான்…. ஓலா நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையானது தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களும் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ஓலா நிறுவனம் S1, S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் களுக்கு முன் பதிவும் நடைபெற்றது. இதனையடுத்து இந்த ஸ்கூட்டர் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று அதனை புக் செய்தவர்களும், வாங்க நினைப்பவர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்ததும், நவம்பர்-10 ஆம் தேதியில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு தொடங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |