சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நிலையில் தமிழை போல தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Categories