Categories
மாநில செய்திகள்

தீபாவளி வரைக்கும் உங்களுக்காக….. எந்தெந்த வழித்தடத்தில்….? தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில் மைசூர் -துத்துக்குடி சிறப்பு கட்டண ரயிலானது (06253) தீபாவளியை ஒட்டி மைசூரில் இருந்து அக் 21ம் தேதி மதியம் 12.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு துத்துக்குடி வந்து சேரும். இதே தடத்தில், துாத்துக்குடியில் (06254) இருந்து மைசூருக்கு அடுத்த நாள் அதாவது அக் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |