Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்… சுவையான.. மொறு மொறுப்பான முறுக்கு செய்ய… இதோ சில டிப்ஸ்…!!!!!

தீபாவளி அல்லது தீப ஒளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை ஆகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் புத்த மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பல வகையான பண்டங்கள் தான் அதிலும் குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும் இதில் பல விதங்கள் இருக்கிறது. உளுந்து முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு போன்ற பல வகையான முறுக்குகள் இருக்கிறது அந்த வகையில் தற்பொழுது உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு போன்ற சுவையான உளுந்து முறுக்கு செய்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.

சுவையான முறுக்கு செய்வதற்கான சில குறிப்புகள் இதோ.

*முதலில் உளுத்தம் பருப்பை வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதேசமயம் உளுந்து நிறம் மாறாமல் லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

*முறுக்கு செய்து ஓரளவு ஆரிய பின்னர் ஏர்டைட் கண்டெய்னரில் மாற்றி மூடி வைக்கவும். இதனால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மொறு மொறுப்பாகவும் சுவையாகவும்.

*விருப்பப்பட்டால் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.

*சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொண்டால் முறுக்கு காரமாகவும் சுவையாகவும் இருக்கும்.

*வெள்ளை எள் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு கருப்பு எள் சேர்த்துக் கொள்ளலாம்.

 

முறுக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்.

 

*அரிசி மாவு- 2 கப்.
*வெள்ளை உளுந்து -1/2 கப்.
*பொட்டுக்கடலை-1/4 கப்.
*பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி.
*வெள்ளை எள்- 1 தேக்கரண்டி.
*வெண்ணெய் -2 தேக்கரண்டி.
*உப்பு தேவையான அளவு.
*என்னை பொறிக்க தேவையான அளவு.

தற்பொழுது செய்முறையை பார்ப்போம்.

1. ஒரு வானலில் அரை கப் வெள்ளை உளுந்து சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

2. அதனை ஓரளவுக்கு ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

3. அதனை சலித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4. மிக்ஸி ஜாரில் 1/4 கப் பொட்டு கடலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அரிசி மாவு,1/2 கப் உளுந்து மாவு,1/4 கப் பொட்டுக்கடலை மாவு,1 தேக்கரண்டி வெள்ளை எள்,2 தேக்கரண்டி வெண்ணெய், 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.

6. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

7. அதன்பின் முறுக்கு உரலில் ஸ்டார் அச்சு வைத்து எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

8. முறுக்கு மாவை சேர்த்து உரலை டைட்டாக மூடி விடவும்.

9. ஒரு கரண்டி அல்லது பிளாஸ்டிக் கவரில் மெதுவாக பிழிந்து கொள்ளவும்.

10. சூடான எண்ணெயில் முறுக்கை பொறிக்கவும்.

11. அதன்பின் 2-3 நிமிடங்களுக்கு திருப்பி போட வேண்டும்.

12. நுரை அடங்கிய பின் எடுத்து விடவும்.

13. ஆற வைத்து ஏர் டைப் கண்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும் ஒரு வாரம் வரை அந்த முறுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

Categories

Tech |