Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் பர்ஃபி… அதுவும் பால் பவுடர் வைத்து…!!!

பால் பவுடர் பர்ஃபி:

இந்த ரெசிபி செய்வதற்கு வெறும் 4 பொருட்கள் இருந்தாலே போதுமானது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில், செய்வதற்கு ஏற்ற பலகாரத்தில் இதுவும் ஒன்று. பெரும்பாலானோர், கடைகளில் இந்த பர்ஃபியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். பால் பவுடர் பர்ஃபியை எப்படி செய்வதென்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

பால் பவுடர்                                          – 1 கப்
பால்                                                          – 1/4 கப்
பொடி செய்யப்பட்ட சர்க்கரை – 1/3 கப்
நெய்                                                         – 3 டேபிள் ஸ்பூன்
நட்ஸ்                                                        – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
குங்குமப்பூ                                            – 4 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்ற வேண்டும். பின் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கெட்டி சேராதவாறு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை அதனோடு சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுத்து, கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பித்ததும், கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும்.

அதை உருட்டும் போது, எளிதில் பந்து போல் வந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின் ஒரு அகலமான தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, நெய் தடவிய ஸ்பூன் வைத்து லேசாக அழுத்தி விட்டு, 10-15 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.

இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்

Categories

Tech |