தீபாவளி ஸ்பெஷலாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இரண்டு போட்டியாளர்கள் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக தொடர்ந்து 4 மணிநேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.