தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும் அவரவர் வீடுகளில் பலகாரம் சுடத் தொடங்கி இருப்பீர்கள். இந்த தீபாவளிக்கு, மினி காரமான முறுக்று எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி மாவு அல்லது இடியாப்பம் மாவு (200 கிராம்) – 1 கப்
தோல் இல்லாத கருப்பு உளுந்து – 2 தேக்கரண்டி
வறுத்த கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
பெருங்காய பொடி – 1/8 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் தோல் இல்லாத கருப்பு உளுந்தை, குறைந்த தீயில் 3-4 நிமிடங்கள் வறுக்கவும். அதனுடன் வறுத்த கடலை பருப்பைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வறுக்கவும்.
பின்பு ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி பொடியாக அரைத்து எடுக்கவும். மாவு நைசாக இருக்க வேண்டும் என்பதால் சல்லடை கொண்டு சலித்து எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு பெரிய கிண்ணத்தில் அரிசி மாவு, வறுத்து அரைத்த மாவு, உப்பு சேர்க்காத வெண்ணெய் அல்லது 2 தேக்கரண்டி எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, எள் அல்லது சீரக விதைகள், பெருங்காய பொடி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பின்னர் சிறுது சிறிதாக தண்ணீர் விட்டு மென்மையான மாவாக பிசையவும் (1/2 கப் வரை தேவைப்படும்).
பின்பு பிசைந்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முறுக்கை எண்ணெயில் பிழிந்து சுட்டு எடுக்கவும். இதனை பிடித்த காபியுடன், காரமான மினி முறுக்கை அனுபவிக்கவும்.