சுவையான தேங்காய் லட்டு! எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
தேவையான பொருள்கள் :
தேங்காய் – 3கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க் – 3 கப்
சீனி – 2 கப்
ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன்
பாதாம் – இரண்டு கைப்பிடி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக கிளறி விட வேண்டும்.
பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் சீனியை சேர்த்து, சீனி கரையும் வரை கிளறி விட்டு, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து 2 நிமிடம் கிளறிய பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
அந்த கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது, கையில் வெண்ணெய் தடவி, அதனை லட்டுகளாக பிடித்து, ஒவ்வொன்றின் மீதும் பாதாமை வைத்தால், சுவையான தேங்காய் லட்டு ரெடி.