Categories
பல்சுவை

தீபாவளி_க்கு இரண்டு வரலாறு இருக்கிறது …..!!

தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்கு அர்த்தத்தை நான் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி ஆவணி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது.

வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றால் ராமன் ராவணனை வதம் செய்து திரும்பி அயோத்தி மாநகரிலே அந்த ஆட்சியை செய்யும்போது அங்கே இருக்கின்ற மக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாட அங்கே தீபாவளி என்ற ஒரு முறை வட இந்தியாவில் இருக்கிறது.

நாம் தென்னிந்தியாவிலேயே நரகாசுரன் என்ற ஒரு அரக்கனை வதம் செய்தது அன்றைய தீபாவளி தினத்தில் அவன் இறக்கும் போது ஒரு வரத்தை அவன் கிருஷ்ணனிடம் பெறுகின்றான். அது என்னவென்றால் இறந்த இந்நாள் மக்கள் மகிழ்ச்சியாக அவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற அந்த அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் தென்னிந்தியாவிலேயே இந்த தீபாவளி என்ற முறை கடைபிடிக்கப்படுகிறது.

Categories

Tech |