Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தீப்தி சர்மா செய்த ரன் அவுட்….. “எந்த சர்ச்சையும் இல்லை”….. தென்னாப்பிரிக்க வீரரின் கருத்து என்ன?

இந்திய மகளிர் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா இங்கிலாந்து மகளிர் சார்லி டீனை மன்கட் செய்ததைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷாம்சி..

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் புறப்பட்டு 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்..  பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி இன்று (28ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது..

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் டி 20 ஐ போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் இந்திய மகளிர் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா இங்கிலாந்து மகளிர் சார்லி டீனை மன்கட் செய்ததைப் பற்றி கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷாம்சி, “எனது கருத்துக்கள் மிகவும் பொதுவில் உள்ளன அதில் எந்த சர்ச்சையும் இல்லை. இரு தரப்பும் நியாயமான முறையில் விளையாட வேண்டும். விதிமுறைகள் உள்ளன, பந்து வீச்சாளர்கள் கோட்டிற்கு பின்னால் தங்கள் கால்களை வைத்திருக்க வேண்டும் என்றால், பேட்ஸ்மேன்களும் அதையே செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா, இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் டீனை நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. இது கிரிக்கெட் ஆன்மாவிற்கு எதிரானது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அதேசமயம் ஐசிசி விதிமுறையின் படி தீப்தி செய்தது சரியே என இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Categories

Tech |