கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள வடக்குப் பகுதியில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி ஜிஜி. இவர்களுக்கு விஷ்மயா(25) மற்றும் ஜிது (22)ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்றதால் சகோதரிகள் இருவரும் தனியாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
அதன் பிறகு வீட்டில் யாரேனும் இருக்கிறார்களா என்று உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் ஒரு உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தது. அந்த உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் மிகவும் கருகிய நிலையில் இருந்ததால் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு உயிரிழந்தது விஷ்மயா என்று தெரியவந்தது. இதற்கிடையில் ஜிது தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. இதையடுத்து தனது சகோதரியான விஷ்ம்யாவை கொலை செய்து வீட்டிற்கு தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.