ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே கேட் அருகில் ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.