சமீப காலமாகவே எலெக்டிரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் செய்யப் போடும் போது அல்லது மற்ற நேரங்களிலோ தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதை தடுப்பதற்காக புதிய பேட்டரி கொள்கையை வகுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய அறிவியல் ஆய்வு நிறுனம் கோடை வெப்பம் தாங்கமுடியாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் தீப்பற்றுவதாக கண்டறிந்துள்ளன.
மேலும், இந்த பேட்டரிகள் அதிகமும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்களில் எத்தகைய பேட்டரிகள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சாலை போக்குவரத்து துறை கொள்கை ஒன்றை தயாரித்து வருகிறது. விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.