தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை தானே ஏற்றுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தீப்பெட்டி கணேசன் மறைவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை தீப்பெட்டி இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்க்கான செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். இனிவரும் காலத்தில் என்னால் இயன்ற உதவியை அவருடைய குழந்தைகளுக்கு செய்வேன் என்று கூறியுள்ளார்.