Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தீப்பெட்டி வைத்து விளையாட்டு” தீப்பிடித்து உடல் கருகி…. 3 வயது சிறுமி பரிதாப பலி…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்-பால்மணி. கூலி தொழிலாளர்கனான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களின் குழந்தைகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம்.
இதேபோல சம்பவத்தன்றும் முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்துள்ளனர். அப்போது கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து எரிச்சல் காரணமாக குழந்தை அலறி துடித்துள்ளது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இந்நிலையில் 10 நாட்களுக்கும்  மேலாகத் தீக்காய சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் கண்காணிப்பிலிருந்த சிறுமி லட்சுமிசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நாங்குநேரி காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Categories

Tech |