குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கனகசபா தெருவில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன் தனது குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார்.
பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு வெடித்து அதன் தீப்பொறி விழுந்து குடிசை மேல் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என கூறியுள்ளனர்.