வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தீய சக்திகள் சதி செய்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய அரசு மேற்கொண்ட பதினோராம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது வருத்தம் அளிப்பதாகவும், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காமல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் பிடிவாதம் பிடிப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு அளித்த ஆலோசனைகள் குறித்து ஆராய்ந்து சனிக்கிழமை தெரிவிக்கும்படி விவசாயிகளிடம் தெரிவித்திருப்பதாகவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததற்கு சமூக விரோதிகளே காரணம் என்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்