Categories
தேசிய செய்திகள்

தீயவை பார்க்காதே…. கேட்காதே…. பேசாதே….. ட்ரம்ப்புக்கு விளக்கிய மோடி …!!

சபர்மதி ஆசிரமம் வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அங்கிருந்த குரங்கு பொம்மைகளை பிரதமர் மோடி விளக்கினார்.

முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி சால்வை அனுவித்து வரவேற்ற மோடி ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கதர் ஆடை வழங்கினார்.பின்னர் காந்தி போட்டோவுக்கு மோடி ,ட்ரம்ப் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்த ராட்டை மனைவியுடன் ட்ரம்ப் சுற்றி பார்த்து வியந்தார்.

 

பின்னர் அங்கு இருந்த மேசையில் வைக்கப்பட்டு இருந்த 3 குரங்கு பொம்மைகளை ட்ரம்ப்க்கு விளக்கி காட்டினார் மோடி. அந்த பொம்மைகள் உணர்த்தும் தீயவை பார்க்காதே , தீயவை கேட்காதே , தீயவை பேசாதே என்ற அகிம்சை கருத்தை முன்வைத்து பிரதமர் மோடி ட்ரம்புக்கு விளக்கினார்.

Categories

Tech |