Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீயாக சுட்டெரித்த சூரியன்…‌. திடீரென பெய்த மழை…. பூமித்தாய் குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அதன்படி பாளையங்கோட்டை, டவுன், மேலப்பாளையம், திம்மராஜபுரம், மணப்படை வீடு, கொங்கந்தான் பாறை, திருமலை கொழுந்து புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |