தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் நடித்து வரும் ஒரே நடிகர் இவர்தான். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் காமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இதனையடுத்து கமல், ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்த பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரே சமயத்தில் பலமொழிபடங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. கடந்த சில நாட்களாக இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவியது. இதற்கு விஜய் சேதுபதியின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் விஜய் சேதுபதி தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜாவான் படத்தில் தான் வில்லனாக நடித்து வருகிறார். அதை தவிர வேறு எந்த தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து புஷ்பா படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளத. இதனால் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இந்த செய்தி அமைந்துள்ளது.