Categories
மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்த மளிகை கடை…. ரூ.4,00,000 பொருட்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள பழையாறு கிராமத்தில் கோட்டையா கோவில் தெருவில் காசியம்மாள்(65) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை ஒட்டி மளிகை கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மளிகை கடை திடீரென தீப்பிடித்து விட்டது. அதன்பிறகு கடையிலிருந்து புகைமூட்டம் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தினால் கடைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ், மின்விசிறிகள், சர்க்கரை மூட்டை, மிளகாய், மல்லி மற்றும் வெள்ளம் போன்ற ரூ.4,00,000 மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மின்கசிவு காரணமாக மளிகை கடையில் தீப்பிடித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Categories

Tech |