Categories
தேசிய செய்திகள்

தீரன் பட பாணியில் நடந்த கொடூர கொலைகள்…. ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது….!!!

மயிலாடுதுறை சீர்காளியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் சவுத்ரி என்பவரின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேலும் 12.5 கிலோ நகை, கார் மற்றும் ரூ.6.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங் என்பவர் அன்றைய தினமே என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடிய மணி மற்றும் ரமேஷ் பட்டேல் வழக்கில் தொடர்புடைய கும்பகோணத்தை சேர்ந்த கருணாகரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மனிஷ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ராஜஸ்தானில் பதுங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விமானம் மூலமாக ராஜஸ்தான் சென்று அங்கு பதுங்கி இருந்த மணிஷை கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |