Categories
தேசிய செய்திகள்

“தீரன்” பட பாணியில் போல…. நகையை பறித்து சென்ற மர்ம நபர்…. கேரளாவில் பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகில் கார்த்தியானி(78) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு தண்ணீர் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார். இதனையடுத்து அந்த மூதாட்டி தண்ணீர் எடுத்து வரும்போது பின்னால் இருந்து அந்த மர்ம நபர் மூதாட்டியை கத்தியால் தாக்கியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி படுகாயமடைந்தார்.

அதன்பிறகு அந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மூதாட்டி தளிபரம்பா கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |