Categories
லைப் ஸ்டைல்

தீராத ஆஸ்துமாவுக்கு இயற்கை மருந்து… எப்படி செய்வது?… வாங்க பார்க்கலாம்…!!!

தீராத ஆஸ்துமா நோய்க்கு வீட்டிலேயே இயற்கையான மருந்து செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

தீராத ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இயற்கை மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

துளசிச் சாறு – 20 மில்லி
ஆடாதொடைச் சாறு – 10 மில்லி
கண்டங்கத்தரி சாறு – 10 மில்லி
கற்பூரவல்லிச் சாறு – 10 மில்லி
புதினாச்சாறு – 20 மில்லி
சுக்கு – 5 கிராம்
ஓமம் – 5 கிராம்
அதிமதுரம் – 20 கிராம்
சித்தரத்தை – 20 கிராம்
மிளகு – 5 கிராம்
திப்பிலி – 5 கிராம்
பச்சை கற்பூரம் – 5 கிராம்
தேன் – 200 கிராம்

செய்முறை:

இதில் 6 முதல் 11 வரை உள்ள சரக்குகளைத் தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காய் சுண்டக்காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டிவிடவும். 1 முதல் 5 வரை உள்ள சாறுகளை ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாகச் சுண்டிய பின் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கசாயத்துடன் கலந்து வைக்கவும்.

அதன் பிறகு தேனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிச் சிறு தீயாய் எரித்துக் கொதிக்க விடவும். தேனில் நுரை நீக்கி, ஏற்கனவே தயாரித்துள்ள கசாயத்தை தேனுடன் கலந்து சிறு தீயாய் எரிக்கவும். நல்ல பதத்தில் இறக்கிவிடவும். சூடு ஆறிய பின்பு, பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து மருந்துடன் கலந்துவிடவும்.

எடுத்துக்கொள்ளும் முறை:

5 மி மூன்று வேலையும் உணவுக்குப் பின்பு எடுக்கவும். சுடுநீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

Categories

Tech |