உடல் வலியால் தினமும் அவதிப்படுபவர்களுக்கு மிக சுலபமான நாட்டுமருந்து வைத்தியம் வீட்டிலையே செய்யலாம்.
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது, பசியைத் தூண்ட கூடியதுமான தழுதாழை நன்மைகள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். தழுதாழைக்கு வாதமடக்கி என்ற பெயரும் உண்டு.
இது வாதத்துக்கு மருந்து ஆகிறது. கபத்தை சீர் செய்யக் கூடியது. ரத்த சோகையை போக்கும் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வீக்கத்தை வற்றச் செய்வது மட்டுமல்லாமல் வலியைத் தணிக்கும் தன்மை கொண்டது. பசியைத் தூண்ட கூடியது. உடல் தேற்றியாகவும் விளங்குகிறது. தழுதாழை இலையை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தழுதாளை இலைகள், சீரகம், பனங்கற்கண்டு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். அதில் சிறு சீரகம், 10 தழுதாலை இலைகள், பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதனை வடிகட்டி குடித்து வந்தால் உடல் வலி சரியாகும். மேலும் சளி மற்றும் இருமல் இல்லாமல் போகும். அஜீரண கோளாறை சரி செய்யும். சாலையோரங்களில் காணப்படும் தழுதாழை மூலிகை பசியை தூண்டும் தன்மை கொண்டது. உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் உள் மருந்தாகிறது. தழுதாழை பயன்படுத்தி உடல் வலியைப் போக்கலாம்.