Categories
தேசிய செய்திகள்

தீராத கடன் சுமை…. வீட்டை விற்க முடிவு செய்த….. 2 மணி நேரத்திற்கு முன் நடந்த ஆச்சர்யம்….!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது பாவா. இவர் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்திற்காகவும் வாங்கிய 50 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளார். எனவே கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க முடிவு செய்த அவர் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார். அப்போது வீடு விற்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முகமது பாவாவின் ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

சொல்லப்போனால் பாபாவிற்கு அடிக்கடி லாட்டரி வாங்கும் பழக்கமே கிடையாதாம். ஏதோ அன்று ஒரு நாள் கேரளா அரசின் 50-50 லாட்டரி சீட்டை அவர் வாங்கியுள்ளார். அது தற்போது பரிசாக வந்து கடன் சுமையை நீக்கியதோடு மட்டுமல்லாமல் விற்க இருந்து வீட்டையும் காப்பாற்றி உள்ளது. ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசுத் தொகையில் வரி போக சுமார் 63 லட்சம் முகமது பாபாவிற்கு கிடைக்கும். அதில் கடன்களை அடைத்தது போக மீதி தொகையை ஏழை மக்களுக்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |