முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இந்திரா நகர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1 மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் காளியப்பனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சுவலி இருந்துள்ளது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் பயனளிக்காததால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கோத்தகிரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.