1) சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை
2) திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்
3) உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் .
4) 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை.
5) பூதநாரயணரையும் இரட்டை பிள்ளையாரையும் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும்.
6) அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும்.
7) மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
8) இதுதவிர 99 கோவில்கள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது.
9 )வலம்வரும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலம் மேம்படுவதோடு, மலையின் சக்தி மிகுந்த அதிர்வுகளும் ஏற்படும்.
10)திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன.