தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மூட்டு வலி பறந்து போகும்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி.
அதனை சரிசெய்ய உங்களுக்காக ஒரு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மூட்டு வலியில் உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டிய 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்ன வெங்காயம் கொஞ்சம் சீரகம் போட்டு நன்றாக கொதிக்க விட்டு, ஒரு டம்ளர் வந்தவுடனேயே இறக்கி கொஞ்சம் சூடாக குடிக்க வேண்டும். இதனை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி பறந்துவிடும். இதில் இருக்கும் வளவளப்பு சீக்கிரம் குணமடைய செய்யும். அதனால் இதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. அனைவருமே இதனை சாப்பிடலாம். குறிப்பாக இதில் உப்பு சேர்க்கக்கூடாது.