குடகு மாவட்டத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து ஒன்றரை கிலோ தலைமுடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது..
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் நாபோக்லு கிராமத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மடிக்கேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர். மேலும் அந்த கட்டி முழுவதும் தலைமுடிகளாக இருந்ததாகவும், உணவு பொருட்களை சாப்பிடும் போது தெரியாமல் சிறுகச்சிறுக வயிற்றுக்குள் சென்று, பின்னர் பெரிய கட்டியாக மாறி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.