சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் கர்ப்பத்திற்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த ஜூன் மாதம் மும்பையை 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தனது பெற்றோரிடம் கடுமையாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் வயிற்றில் பிரச்சினை இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் தங்கள் மகளை விசாரித்தனர்.
அப்போது இவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த வடா பாவ் விற்கும் நபர் தான் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்துஅந்த நபர் தப்பித்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். அவரது முழுப்பெயர் யாருக்கும் தெரியாது என்பதால் காவல்துறையினரால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மும்பைக்கு மீண்டும் அந்த நபர் வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தியது, பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்தது போன்று குற்றங்களுக்காக அந்த நபர் கைது செய்யப்பட்டவர் என்பது அதன் பின்னரே தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது