மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. 48 வயதான இவர் கோவில்களில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
அவரது உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அவரின் மகன் லோகநாதன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் மேலும் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.