Categories
ஆன்மிகம் விழாக்கள்

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நூர்சாகிபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் விரதம் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை மீது இருக்கும் காட்டழகர் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து 28 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்தனர். இதனை அடுத்து தீர்த்த நீரை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |