Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும்… பாஜகவினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

ராமேஸ்வரம் 22தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருகின்றது. இதனால் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர்.

டாஸ்மார்க் கடை, சினிமா தியேட்டர் ஆகியவை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்றும், வெள்ளி, சனி, ஞாயிறு வழக்கம்போல கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் கோவிலின் மேற்கு வாசலில் வைத்து நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாகேந்திரன், நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் பவர் நாகேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |