சொகுசு கார் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நகல் இன்று விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜயின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை.
இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூடுதல் மனு இன்று நீதிபதி எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.