Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்டு வாகன சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகையில் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சங்கமங்கலம் பகுதியில் வசித்து வரும் சிவா என்பவரது வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த வாகனத்தை சோதித்தபோது 600 பாக்கெட்களை சாராயம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்வது தெரியவந்தது.

மேலும் அந்த பாக்கெட்டுகளில் 110 லிட்டர் சாராயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 110 லிட்டர் சாராயத்தையும், இரு சக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக சாராயம் கடத்திய குற்றத்திற்காக சிவா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |